காரைக்கால் ஐயங்கார்ஸ்ன் ஆடிப்பெருக்கு வாழ்த்துக்கள்

Posted by Akatheesan Ajay on

இந்த வருட ஆடிப்பெருக்கை நமது காரைக்கால் ஐயங்கார்ஸ்ன் இனிப்புகளுடன் கொண்டாடி மகிழுங்கள்.

காவிரி நதியைப் போற்றுகிற ஒப்பற்ற திருவிழா.

அகத்திய முனிவர் காவிரியை கமண்டலத்தில் அடைத்து வைத்தார். இதனால் பூமி வறண்டது எங்கும் வறட்சி ஏற்பட்டது. விநாயகர் காக்கை உருவத்தில் வந்து கமண்டலத்தை தட்டிவிட பொங்கி பிரவாகம் எடுத்தாள் காவிரி அன்னை.

ஆடிப்பெருக்கன்று காவிரித் தாயை வணங்கினால் ஆண்டு முழுவதும் குடும்பத்தைத் தீமை வராமல் காவிரித்தாய் காப்பாள், என்பது ஐதீகம்.

ஆடிப்பெருக்கன்று செய்யும் செயல்கள் பல்கி பெருகும் என்பது ஐதீகம்

விவசாயம் செழிக்கவேண்டும், காடு கரையெல்லாம் நீரால் நிறைந்திருக்கவேண்டும், போட்ட விதையெல்லாம் பொன்னாக முளைக்க வேண்டும் என்று ஆடிப்பெருக்கு நாளில் விவசாயிகள் வேண்டிக்கொள்வார்கள்.

ஆடியில் காவிரித்தாய் கருவுற்றிருப்பதாக ஐதீகம். எனவேதான் தனது தங்கையான காவிரியை காண ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சீர்வரிசையுடன் வருவார். புடவை, திருமாங்கல்யம், வெற்றிலை, பாக்கு, பழங்கள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு யானை மீது வந்து காவிரிக்கு கொடுப்பார்.

இத்தகைய சிறப்பு மிக்க நன்நாளில் உற்றார் உறவினர்களுடன் நமது காரைக்கால் ஐயங்கார்ஸ் இனிப்புகளுடன் கொண்டாடி மகிழுங்கள்...

இனிமையான தருணஙகளில் என்றும் உங்களுடன் காரைக்கால் ஐயங்கார்ஸ்