காரைக்கால் ஐயங்கார்ஸின் தம்ரூட் கேக்

Posted by Akatheesan Ajay on

 

           சில வருடங்களுக்கு முன்பு ஒரு பக்ரீத் பெருநாளுக்கு முந்தைய சில தினத்தில் குட்டி சிங்கப்பூர் என்று தஞ்சை மாவட்ட மக்களால் செல்லமாக அழைக்கப்படும் கூத்தாநல்லூருக்கு அருகிலிருக்கும் ஒரு கிராமத்திலிருந்து ஒரு குடும்பம் எங்கள் காரைக்கால் ஐயங்கார்ஸிற்கு வந்திருந்தார்கள்.

            எல்லா ஸ்வீட்ஸ்களையும் வாங்கினாலும், குறிப்பாக அவர்கள் தம்ரூட் கேக் பற்றி அதிகம் விசாரித்து கொண்டிருந்தார்கள். எங்கள் ஐயங்கார்ஸின் தம்ரூட் கேக் ஒன்றை குடும்பத்தோடு சுவைத்தார்கள்.

            அவர்களின் குடும்பத்தில் வயதானவராக இருந்த ஒரு ஆச்சி தம்ரூட் கேக்கை சுவைத்த படியே இந்த கேக்கின் பெயர் என்ன என்று கேட்டார்கள், தம்ரூட் கேக் என்று சொன்னோம், அதற்கு அவர் சொன்னார் நீங்க என்ன வேணாலும் புதுமையா பெயர் வச்சிக்கோங்க ஆனால் நாங்கள் சொல்லும் பெயர் தம்மடை என்று சொல்லிக்கொண்டே எங்கள் தம்ரூட் கேக்கின் சுவையிலிருக்கும் அத்தனை குறை நிறைகளையும் சில நிமிடத்தில் அலசி ஆராய்ந்து ஒரு மிகப்பெரிய ஸ்டார் ஹோட்டலின் ச்செஃபை விட மிகத்துல்லியமாக கணித்து எங்களிடம் சொன்னார்கள்.

              அவர் தம்ரூட் கேக்கை பற்றி சொன்ன விதம் கண்டு ஆச்சர்யம் அடைந்த நான் உடனடியாக எங்கள் நிறுவனத்தின் மாஸ்ட்டர்கள் சிலரை போன் செய்து கடைக்கு வரவழைத்து அந்த ஆச்சியிடம் தம்மடை கேக் செய்வதற்கான முழு ரெஸிப்பியையும் கேட்டு குறிப்பெடுத்து கொண்டு அந்த ஆச்சிக்கு எங்கள் நிறுவனத்தின் சார்பில் நன்றியை சொன்னதோடு, கட்டாயம் அடுத்த முறை எங்கள் காரைக்கால் ஐய்யங்கார்ஸிற்கு நீங்கள் வரும் போது நீங்கள் சொன்ன உங்கள் கூத்தாநல்லூர் கைப்பக்குவத்தில் கண்டிப்பாக எங்கள் தம்ரூட் கேக் இருக்கும் என்று சொன்னோம்.

               எங்கள் காரைக்கால் ஐயங்கார்ஸிற்கு ஒரு பழக்கம் உண்டு, வாடிக்கையாளர்கள் சொல்லும் நிறை குறைகளை முழுமையாக கேட்டு அடுத்த முறை அந்த குறை இல்லாத வகையில் இருக்க வேண்டும் என்பது தான் அது , மேலும் எங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்காக எத்தகைய நவீன எந்திரங்கள், தயாரிப்புக்கருவிகளை நாங்கள் பயன்படுத்தினாலும் உணவில் பாரம்பரியம் மாறாத சுவையை தர வேண்டும் என சுவையை தருவதும் எங்கள் நிறுவனத்தின் தனிச்சிறப்பு .

                அந்த வகையில் ஆயிரக்கணக்கான வகை ஸ்வீட்,பேக்கரி வகைகளை நாங்கள் ஒவ்வொரு நாளும் அறிமுகப்படுத்தினாலும் தம்ரூட் கேக்கை, யாவரும் விரும்பும் சுவையான தம்மடை பக்குவத்தில் நாங்கள் தருவதற்க்கு காரணமாக இருந்த அந்த ஆச்சி மற்றும் அவரின் குடும்பத்தினருக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

என்றும் சுவையோடு வாடிக்கையாளர் தம் சேவையில் காரைக்கால் ஐயங்கார்ஸ்.